காத்தான்குடியில் உள்ளக விளையாட்டு அரங்கு அமைப்பு தொடர்பில் விஜயம்.

நவீன உள்ளக விளையாட்டரங்கு : ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஹிஸ்புல்லாஹ் எம்பி ஆய்வு

காத்தான்குடி ஆற்றங்கரைப்பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தித்திட்டங்களை பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் இன்று (13) நேரில் சென்று பார்வையிட்டார்.

இதன்போது, நவீன வசதிகளுடன் கூடிய உள்ளக விளையாட்டரங்கு (Indoor Stadium) அமைக்கும் திட்டம் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

மேலும், இப்பகுதியின் முழுமையான முன்னேற்றத்தை நோக்கமாகக்கொண்ட ஏனைய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் ஆராய்யப்பட்டது.

இந்நிகழ்வில், காத்தான்குடி நகர சபை உறுப்பினர் ஈ.எம் றுஸ்வின் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top