

Eravur_Cricket_League_2026.
தவிசாளர் எம்.எஸ். நழீம் அவர்களின் தலைமையில் கோலாகலமாக ஆரம்பம்
ஆற்றங்கரை மைதானத்தில் உற்சாகமான உத்தியோகபூர்வ தொடக்கம்.
ஏறாவூரின் விளையாட்டு வரலாற்றில் முக்கிய இடத்தைப் பெறும் Eravur Cricket League – 2026 கிரிக்கெட் தொடர் இன்று பிற்பகல் 4.00 மணிக்கு ஆற்றங்கரை மைதானத்தில் கோலாகலமான உத்தியோகபூர்வ வைபவத்துடன் ஆரம்பமானது.
ஏறாவூர் கிரிக்கெட் லீக்கின் தலைவரான எம். பௌசர் அவர்களின் முன்னெடுப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஏறாவூர் நகரசபையின் கௌரவ தவிசாளர் எம்.எஸ். நழீம் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிகழ்விற்கு தலைமையேற்றார். நகரசபை கௌரவ உறுப்பினர்கள் எம்.ஆர். நஸீர், எம்.ஐ.ஏ. நாஸர் மற்றும் Pro Feed நிறுவனத்தின் தவிசாளர் றிஸ்வான் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
இப்போட்டித் தொடரில் Kp Sea Food, Lanka TVS King, NP Warriors, Maklamady Royal மற்றும் NKFSC ஆகிய ஐந்து அணிகள் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்துகின்றன. 8 ஓவர், 11 பேர் கொண்ட மென்பந்து கிரிக்கெட் போட்டிகளாக நடைபெறும் இத்தொடர் மாலை மற்றும் இரவு நேரங்களில் ரசிகர்களை கவரும் வகையில் நடைபெறவுள்ளது. இறுதிப் போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.
நிகழ்வின் ஆரம்பத்தில் அணிகளின் முகாமையாளர்களுக்கு அதிதிகளினால் நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. தொடர்ந்து, வீரர்களின் அறிமுக நிகழ்வு இடம்பெற்று, போட்டி சூழலை உற்சாகமயமாக மாற்றியது.
போட்டிகள் கௌரவ தவிசாளர் எம்.எஸ். நழீம் அவர்களினால் நாணயச்சுழற்சி மேற்கொள்ளப்பட்டு உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, கௌரவ தவிசாளர் துடுப்பெடுத்தாடவும், கௌரவ உறுப்பினர் பந்து வீசவும் செய்ததன் மூலம் போட்டிகள் உற்சாகமான முறையில் தொடங்கின.
இப்போட்டியின் ஆரம்ப நிகழ்வை வொயிஸ் ஒப் ஏறாவூர் அமைப்பின் உறுப்பினர் நிப்றாஸ் தொகுத்து வழங்கியிருந்தார்.
