கிராம அபிவிருத்தி சங்க காணி கொள்வனவுக்கு நிதியுதவி

கிராம அபிவிருத்திச்சங்க காணிக்கொள்வனவுக்கு கல்குடா யங் ஸ்டார் நிதியுதவி

வாழைச்சேனை (206D) கிராம அபிவிருத்திச்சங்கம் முன்னெடுத்து வரும் காணிக்கொள்வனவு நடவடிக்கைக்கு கல்குடா யங் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தினால் ஒரு தொகைப்பணம் இன்று அன்பளிப்புச் செய்யப்பட்டது.

இன்று வாழைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்று வரும் காணிக்கொள்வனவு நிதி சேகரிப்பு உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் போதே குறித்த நிதி கையளிக்கப்பட்டது.

கழகத்தின் பிரதித்தலைவர் ஏ.எல்.சதாம் தலைமையிலான உதைப்பந்தாட்ட அணி முகாமையாளர் எம்.எம்.முஸம்மில், கழக உறுப்பினர் டீ.சலாம் ஆகியோர் குறித்த நிதியினை கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபைத்தவிசாளர் எம்.எம்.ஹலால்தீன் அவர்கள் முன்னிலையில் கிராம அபிவிருத்திச்சங்க நிருவாகிகளிடம் கையளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top