35வது பிரதேச இளைஞர் விளையாட்டு போட்டியில் வெற்றிபெற்றவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் கடந்த ஆண்டு நடைமுறைப்படுத்திய 35 ஆவது பிரதேச இளைஞர் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற இளைஞர் யுவதிகளுக்கான சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கும் நிகழ்வு செவ்வாய்கிழமை( 5)
அன்று
ஏறாவூர் நகர் பிரதேச இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் AW. இர்சாத் அலி தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

நிகழ்வின் அதிதிகளாக ஏறாவூர் நகர் பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில், உதவிப் பிரதேச செயலாளர் யூ.எம்.அஸ்லம், பிரதேச செயலக கணக்காளர் திருமதி. தர்மினி, தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மட்டு. மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி திரு.எம்.சசிகுமார், தேசிய சம்மேளன பிரதிநிதியும் ஏறாவூர் பிரதேச இளைஞர் கழக சம்மேளன தலைவருமான ஜே.ஏ.றுஜாஸ், சம்மேளனத்தின் உப தலைவி எம்.யூ.எப்.றுஸ்னா ஆகியோருடன் பிரதேச சம்மேளன நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர் .

நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகளால் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற இளைஞர் யுவதிகளுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் பதக்கங்களும் அணிவிக்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top