தேசியத்தில் முதன்மை பெற்று சாதனை படைத்த வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை.

தேசியத்தில் அனைத்துப்பிரிவுகளிலும் முதன்மை பெற்று சாதனை படைத்த வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை

தேசிய ரீதியில் தேர்தல் ஆணைக்குழுவினால் வாக்கின் பலம் எனும் தலைப்பில் நடாத்தப்பட்ட குறுந்திரைப்பட போட்டியில் வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை அனைத்துப்பிரிவுகளிலும் தேசிய ரீதியில் முதன்மை நிலை பெற்று சாதனை படைத்துள்ளது.

குறும்படத்தை சமர்ப்பித்த என்.ஆர்.முஸ்ஹப் அஹமட், படப்பிடிப்புக்கு உதவிய எம்.என்.எம்.ஸஹ்ரான், எம்.எச்.எம்.நிஸ்பான் ஆகிய மாணவர்களுக்கும் குறும்படத்தில் நடித்த பிரதி அதிபர் எம்.ஏ.அபுதாஹிர் அவர்களுக்கும் தயாரிப்பு, வசனம், நெறியாள்கை அனைத்தையும் மேற்கொண்டு வெற்றி பெறக்காரணமாய் அமைந்த ஜே.சேஷன் ஆசிரியருக்கும் பாடசாலைச்சமூகம் சார்பில் உளம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் பெரு மகிழ்ச்சியடைவதாகவும் உறுதுணையாக இருந்த மட்டக்களப்பு மாவட்ட உதவித்தேர்தல் ஆணையாளர் என்.ரேகன், அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.ரேவதனன் ஆகியோருக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாகவும் கல்லூரி முதல்வர் எம்.பி.அன்வர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top