ஏறாவூர் மிச்நகர் பிரதேசத்தில் இருள்சூழ்ந்த இடங்களில் மின்குமிழ்கள் பொருத்தப்பட்டன.

ஏறாவூர் மிச்நகர் பிரதேசத்தில் இருள்சூழ்ந்த இடங்களை ஒளியூட்டும் வேலைத்திட்டம் தொடர்ந்த வண்ணம் உள்ளது.

அந்தவகையில் இன்று வெள்ளிக்கிழமை காலை அடையாளப்படுத்தப்பட்ட மின்கம்பங்களுக்கு மின்குமிழ்கள் பொருத்தப்பட்டன.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மிச்நகர் வட்டார கௌரவ உறுப்பினர் MH.சபூர்தீன் ஹாஜியார் அவர்களின் முயற்சியின் பலனாக ஏறாவூர் பற்று பிரதேசசபை ஊழியர்களினால் மின்குமிழ்கள் பொருத்தப்பட்டன.இதன்போது மிச்நகர் சனசமூக நிலையத்தின் நிருவாகிகளும் கலந்து கொண்டிருந்தனர் .

இருள்சூழ்ந்த இடங்களுக்கு ஒளியூட்டியமைக்காக பிரதேச பொதுமக்கள் ஏறாவூர் பற்று பிரதேசசபையின் மிச்நகர் வட்டார கௌரவ உறுப்பினர் MH.சபூர்தீன் ஹாஜியார் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top