


இலங்கை பொலிஸ் பயன்பாட்டிற்காக, இந்திய – இலங்கை நட்புறவு திட்டத்தின் கீழ் இந்திய அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட 134 கெப் (Cabs) ரக வாகனங்களை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கும் நிகழ்வானது திங்கள்கிழமை (25) அன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இந்திய – இலங்கை நட்புறவு திட்டத்தின் கீழ் இந்தியா இலங்கைக்கு வழங்கி வரும் தொடர்ச்சியான ஆதரவிற்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், இந்த பணிகளுக்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட பணியாளர்களுக்கும் தனது நன்றிகளையும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.
