

புதிய காத்தான்குடி கடற்கரையோர வீதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற மஸ்ஜிதுல் அன்வர் பள்ளிவாயலின் புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு வைபவம் ஞாயிற்றுக்கிழமை (31) காலை 07.00 மணியளவில் பக்திப்பூர்வமாக இடம்பெற்றது.
மேற்படி பள்ளிவாயலின் நம்பிக்கையாளா் சபை சபை தலைவர் ஏ.பீ.எம்.றஜாயி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்ச்சியில் புதிய கட்டடத்திற்கான அடிக்கல்லை உலமாக்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் இணைந்து நாட்டி வைத்தனர்.
காத்தான்குடி மஃஹதுஸ்ஸுன்னா அந்நபவிய்யா மகளிா் அரபுக் கல்லூரியின் தலைவா் அஷ்ஷெய்க் எம்.சீ.எம்.றிஸ்வான் (மதனி) அவா்களினால் சிறப்பரை நிகழ்த்தப்பட்டது.
அதனையடுத்து காத்தான்குடி நகர சபையின் தவிசாளா் எஸ்.எச்.எம்.அஸ்பா் அவா்களின் உரை இடம்பெற்றது.
இதன்போது பள்ளிவாயலினை நிர்மாணித்து கொடுக்கும் பெஷன் ஹவுஸ் மர்ஹும் எஸ்.எச்.எம்.நஜீம் அவர்களின் குடும்பத்தினர் சார்பில் முதல் கட்ட கொடுப்பனவு ஒப்பந்தகாரரிடம் கையளிக்கப்பட்டது.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா காத்தான்குடி கிளையின் தலைவா் அஷ்ஷெய்க் ஏ.எம்.ஹாரூன் (றஷாதி), செயலாளா் அஷ்ஷெய்க் எம்.ஐ.ஜவாஹிர் (பலாஹி), காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவா் எம்.சீ.எம்.ஏ.சத்தாா், செயலாளா் அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். றமீஸ் ஹாபிழ் (ஜமாலி), பள்ளிவாயலின் முன்னாள் நம்பிக்கையாளா் சபை தலைவா் எம்.எல்.ஆதம்பாவா உட்பட அழைப்பு அதிதிகள், உலமாக்கள், மஸ்ஜிதுல் அன்வர் பள்ளிவாயலின் தற்போதைய மற்றும் முன்னாள் நம்பிக்கையாளா் சபை உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் மர்ஹும் எஸ்.எச்.எம்.நஜீம் அவர்களின் குடும்பத்தினர் எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
புதிய கட்டடப் பணிகள் இறைவனின் அருளால் சிறந்த முறையில் நிறைவடையவும், இப்பிரதேச மக்களின் ஆன்மீகத் தேவைகளை நிவர்த்தி செய்யும் ஒரு முக்கிய மையமாக இது திகழவும் காத்தான்குடி ஜாமிஉல் ழாபிரீன் ஜும்ஆப் பள்ளிவாயலின் ஆயுட்கால பேஷ் இமாம் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ஜெயினுதீன் (மதனி) அவா்களினால் விசேட துஆப் பிரார்த்தனையும் நடத்தப்பட்டது.
நிகழ்ச்சிகள் அனைத்தும் பள்ளிவாயலின் செயலாளரும் காத்தான்குடி நகர சபையின் அன்வர் வட்டாரத்திற்கான உறுப்பினருமான எம்.எச்.எம்.ரிஸ்வி அவர்களால் நெறிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது
