சிறிலங்கா முஸ்லிம் மீடியா போரத்திற்கும் அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளருக்கும் இடையில் சந்திப்பு.
தகவல் திணைக்கள பணிப்பாளர்நாயகம் – மீடியா போரம் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் எச்.எஸ்.கே.ஜே. பண்டாரவிற்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியாபோரம் செயற்குழு உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு 06.11.2025 வியாழக்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. ஶ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் தலைவர் எம்.பீ.எம்.பைறூஸ் தலைமையிலான செயற்குழு உறுப்பினர்கள் இதில் பங்கேற்றனர். இச் சந்திப்பில் நாடளாவிய ரீதியிலுள்ள மும்மொழி ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், அவர்களுக்கான பயிற்சி மற்றும் நலன்புரி திட்டங்கள், தகவல் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத்…
