சமூக ஊடகங்களை கையாளும் போது கூடிய அவதானம் தேவை.
Care Before you Shareசமூக ஊடகங்களின் ஊடாக ஒரு விடயத்தை பகிர்வதற்கு முன்னர், அதனை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். முந்தைய காலங்களில் ஒரு செய்தி மக்களிடம் சென்றடைய வேண்டுமென்றால், அதற்கான உரிய ஊடகங்களாக தொலைக்காட்சி, வானொலி மற்றும் செய்தித்தாள்கள் மட்டுமே காணக்கூடியதாக இருந்தன. அப்போது ஒரு செய்தி பிரசுரிக்கப்படவேண்டும் அல்லது ஒளிபரப்பப்படவேண்டும் என்றால், அந்தச் செய்தி பிராந்திய ஊடகவியலாளர்கள் மூலம் ஊடக நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பப்பட வேண்டியிருந்தது. அவ்வாறு அனுப்பப்படும் செய்திகளை தலைமை அலுவலகத்தில் இருக்கும்…
