Headlines

வாழைச்சேனை கடதாசி ஆலையின் இப்தார் நிகழ்வு.

வாழைச்சேனை கடதாசி ஆலையின் இப்தார் நிகழ்வு. வாழைச்சேனை கடதாசி ஆலையின் இப்தார் நிகழ்வு நேற்று 06.03.2026 அதன் தலைவர் உப்பாலி ரட்நாயக்க தலைமையில் ஆலையின் மண்டபத்தில் இடம்பெற்றது. நீண்ட வரலாற்றினைக்கொண்ட குறித்த கடதாசி உற்பத்தி நிலையமானது கடந்தகால அரசாங்க காலகட்டத்தில் முற்றிலும் சேதமடைந்த நிலையில் இயங்கு நிலையற்று காணப்பட்டது. தேசிய மக்கள் சக்தி அரசு நாட்டினை பொறுப்பேற்றதற்கு பிற்பாடு கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியின் வழிகாட்டலில் மீண்டும் தலைவர் உப்பாலி ரட்நாயக்கவின் நிருவாகத்தின் கீழ் உற்பத்தியினை ஆரம்பித்து…

Read More

ஏறாவூர் நகரசபையில் முழு நாடும் ஒன்றாக தேசிய செயற்திட்டம்.

ஏறாவூர் நகரசபையில் “முழு நாடும் ஒன்றாக” தேசிய செயல் திட்டம் ஏறாவூர் நகரசபையில் “முழு நாடும் ஒன்றாக” தேசிய செயல் திட்டம்“ ஏறாவூர் நகரசபை தவிசாளர் எம்.எஸ்.நளீம் அவர்களின் தலைமையில் நகர சபை மண்டபத்தில்  (05)திகதி அன்று  நடைபெற்றது. அதிமேதகு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் நாடளாவிய ரீதியில் போதைப்பொருளுக்கு எதிரான செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இதன் ஒர் அங்கமாக மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மற்றும் ஏறாவூர் நகர் பிரதேச செயலாளர் எஸ்.எச் முசம்மில் அவர்களின்…

Read More

பாரம்பரிய உணவு விற்பனை நிலையம் சின்ன முகத்துவார பகுதியில் திறந்து வைப்பு.

பாரம்பரிய உணவு விற்பனை நிலையம் திறந்து வைப்பு நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைள் அமைச்சின் 2.4 மில்லியன் நிதியொதுக்கீட்டில் ஆலயடிவேம்பு பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட சின்னமுகத்துவாரப்பகுதியில் எமது முன்னோர்களின் பாரம்பரிய உணவுகளை விற்பனை செய்யும் விற்பனை நிலையம் நேற்று (01) ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில், அம்பாறை மாவட்ட கரையோரப்பிரதேச ஒருங்கிணைப்பு குழுத்தலைவரும், அரசியல் பேரவை உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா பிரதம அதிதியாகக்கலந்து சிறப்பித்ததோடு, ஆலயடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ், ஆலயடிவேம்பு தேசிய…

Read More

ஹிஸ்புல்லாஹ் எம்.பி. ஊடாக பேரீத்தம்பழங்கள் வழங்கி வைப்பு.

ஹிஸ்புல்லாஹ் எம்.பி யினால் பேரீச்சம் பழம் வழங்கிவைப்பு..! புனித ரமழான் மாதத்தினை சிறப்பிக்கும் வகையில் ஸ்ரீலங்கா ஹிரா பவுண்டேஷன் ஏற்பாட்டில், இலங்கையில் உள்ள பள்ளிவாயல்கள், மதரஸாக்கள் மற்றும் பொது அமைப்புகளுக்கு பேரீச்சம் பழம் வழங்கி வைக்கும் ஆரம்ப நிகழ்வு, ஹிரா பவுண்டேஷன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களின் தலைமையில் கடந்த (27)ம் திகதி அன்று நடைபெற்றது. இந்நிகழ்வு, காத்தான்குடி அல் அக்ஸா பெரிய ஜும்ஆ பள்ளிவாயல் வளாகத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் காத்தான்குடி…

Read More

அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் கல்முனை பொலிஸ் ஆலோசனை குழுவுடன் சந்திப்பு.

அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா.அதிபர் சுஜித் வெதமுல்ல கல்முனை பொலிஸ் ஆலோசனை குழுவுடன் சந்திப்பு இன நல்லிணக்கம், பொதுமக்கள் தொடர்பு, போதைப்பொருள் ஒழிப்பு உள்ளிட்ட செயற்பாடுகளை சிறப்பாக முன்னெடுத்ததற்காக, அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா.அதிபர் சுஜித் வெதமுல்ல அவர்களுக்கு கல்முனை தலைமையக பொலிஸ் ஆலோசனை குழுவின் பொதுச் செயலாளர் எம்.ஐ.எம் ஜிப்ரி மற்றும் குழு உறுப்பினர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவம் வழங்கினர். ஞாயிற்றுக்கிழமை (22) மாலை கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில்,…

Read More

நிந்தவூரில்  கடலரிப்பு பாதிப்பு.

பாரிய கடலனர்த்தப்பாதிப்பு – ஆதம்பாவா எம்பி நேரில் பார்வையிட்டு, துரித பாதுகாப்பு நடவடிக்கை. நிந்தவூர் அட்டப்பள்ளம் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள பாரிய கடல் அனர்த்தம் காரணமாக அப்பிரதேசத்தில் உள்ள அதிகமான பொதுமக்களின் காணி மற்றும் தென்னந்தோப்புகள் கடலுக்குள் சென்று விட்டன. அதில் ஒருவரின் 5 ஏக்கர் காணி முற்றாக கடலிலுக்குள் காவு கொள்ளப்பட்டுவிட்டது. இதன் காரணமாக அந்த பிரதேச தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் வேண்டிக் கொண்டதிற்கிணங்க, நேற்று (23) திங்கட்கிழமை மாலை அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,…

Read More

வாழைச்சேனை பகுதிகளில் காட்டு யானையின் அட்டகாசத்தால் பல சேதங்கள்.

மட்டக்களப்பு, வாழைச்சேனை நகருக்குள் புகுந்த காட்டு யானை ஒன்று நடத்திய தாக்குதலில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். இன்று அதிகாலை வேளையில் ஊருக்குள் நுழைந்த இந்த யானை, வீதிகளில் சென்றவர்கள் மீதும் குடியிருப்புகள் மீதும் திடீர் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. இதில் படுகாயமடைந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். காயமடைந்த மற்றவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நகரப் பகுதிக்குள் யானை புகுந்ததால் பொதுமக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர்.

Read More

மலையக மக்களை சந்தித்தார் ஜனாதிபதி .

“முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்திட்டத்தின் மத்திய மாகாண நிகழ்வில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நுவரெலியா செல்லும் வழியில் இன்று (11) காலை அந்த மாவட்டத்தின் தோட்டத் தொழிலாளர்களைச் சந்தித்து அவர்களின் சுகதுக்கங்களை விசாரித்து சிநேகபூர்வமான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

Read More

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச  சி.ஐ.டியில் முன்னிலை.

நாமல் ராஜபக்ச சி.ஐ.டியில் முன்னிலை. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். அந்த திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலுக்கு அமைய அவர் அங்கு முன்னிலையானார். இதற்கு முன்னரும் நாமல் ராஜபக்சவுக்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அவர் நாட்டில் இல்லாத காரணத்தினால் பிறிதொரு திகதியை வழங்குமாறு விடுத்த கோரிக்கைக்கு அமையவே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Read More

மீராவோடை பிரதேச வைத்தியசாலையில் நீண்ட நாட்களின் பின்னர் குழந்தை பிரசவம்.

மீராவோடை பிரதேச வைத்தியசாலையில் நீண்ட நாட்களின் பின் குழந்தை பிரசவம். எஸ்.எம்.எம்.முர்ஷித். மீராவோடை பிரதேச வைத்தியசாலையில் மிக நீண்ட நாட்களாக செயற்படாமலிருந்து மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட மகப்பேற்றுப்பிரிவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) குழந்தை பிரசவிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி றிஸ்வியா சஜ்ஜாத் தெரிவித்தார். மிக நீண்டகாலமாக மகப்பேற்றுப்பிரிவு மூடப்பட்டிருந்த நிலையில் பொறுப்பு வைத்திய அதிகாரி றிஸ்வியா சஜ்ஜாத் பொறுப்பேற்றதன் பின் வைத்தியசாலையின் அபிவிருத்தியில் எடுத்து வரும் அயராத முயற்சியினால் மகப்பேற்றுப்பிரிவு அண்மையில் மீள ஆரம்பிக்கப்பட்டிருந்தது. அத்துடன், வைத்தியசாலையின் பெளதீக…

Read More
Back To Top