வவுனியாவில் வடக்கு வலய பதிவறை திறந்து வைப்பு.

பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் வடக்கு வலய பதிவறை (Northern Zonal Record Room) நேற்று (30.07.2026) காலை 08.30 மணிக்கு வவுனியா மாவட்டம் A 9 வீதி கனகராயன்குளம் – மன்னகுளம் பகுதியில் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கௌரவ (பேராசிரியர்) ஏ.எச்.எம்.எச். அபயரத்ன அவர்களால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

வடக்கு மாகாண மக்களின் நீண்டகால தேவையை நிறைவேற்றும் வகையில் நிறுவப்பட்டுள்ள இந்தப் பதிவறையின் மூலம், பிறப்பு, இறப்பு மற்றும் திருமணப் பதிவுகள் சேதமடைந்திருந்தால், அவற்றின் பிரதிகளை இதுவரை கொழும்பு மாளிகாவத்தையில் அமைந்துள்ள பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் தலைமையகத்தில் மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டியிருந்த நிலைமை மாற்றமடைந்துள்ளது.

இனிமேல் குறித்த ஆவணங்களை வவுனியாவில் அமைந்துள்ள வடக்கு வலய பதிவறையிலேயே பெற்றுக்கொள்ள முடியும். மேலும், இன்றுமுதல் உடனடியாக பிறப்புச் சான்றிதழ்களை வழங்கும் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் காலங்களில் திருமணச் சான்றிதழ் மற்றும் இறப்புச் சான்றிதழ்களை இவ்வலுவலகத்தின் ஊடாக பெற்றுக்கொள்ளும் வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top