வாழைச்சேனை சக்ஸஷ் முன்பள்ளியில் தேசிய முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி வார நிகழ்வு.

மகளிர் மற்றும் சிறுவர்கள் அமைச்சின் முன்பிள்ளைப் பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகத்தினால் தேசிய ரீதியில் முன்னெடுக்கப்படும் தேசிய முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி வாரத்தை முன்னிட்டு சக்ஸஷ் முன்பள்ளியால் நடாத்தப்பட்ட ஓவியப் போட்டியில் பங்குபற்றிய முன்பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வும் நேற்று (30.07.2026) வாழைச்சேனை சக்ஸஷ் முன்பள்ளியில் இடம்பெற்றன.

முன்பள்ளி அதிபர் என்.ஜே.நஸ்மிலா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அதிதிகளாக கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எம். சர்ஜுன், மட்டக்களப்பு மாவட்ட பாலர் பாடசாலை வெளிக்கள உத்தியோகத்தர் திருமதி. வி. கயல்விழி, வாழைச்சேனை வை.அகமட் வித்தியாலய அதிபர் யூ.எல்.எம்.ஹரீஸ், கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் எம்.எஸ்.நெளபர், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக சுற்றாடல் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஈ.எல்.எம்.அஸ்ரப், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் ஏ.எம்.ஆர்.தாஸிம், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக ஆயுர்வேத அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.எம்.பாத்திமா, கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக உற்பத்தித்திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் வீ.சுஷாந்தினி, ஊடகவியலாளர் எஸ்.எம்.எம்.முர்சித் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

“வியத்தகு சிறுவர் உலகத்திற்கு ஒளிவிளக்காகும் அன்பான குடும்பம்” என்ற தொனிப்பொருளில் இவ்வாண்டுக்கான தேசிய முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி வாரம் நாடளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்பட்டது.

இதனை முன்னிட்டு நடாத்தப்பட்ட ஓவியப் போட்டி மூலம் குடும்ப உறவில் முன்பள்ளி மாணவர்களுக்கு கிடைக்கும் அன்பு மற்றும் வகிபங்கினை வெளிக்காட்டும் கருப்பொருள் இதன்போது வெளிக்காட்டப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக நிகழ்வின் நிறைவில் பங்கேற்ற முன்பள்ளி மாணவர்களுக்கு அதிதிகளினால் சான்றிதழ்கள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top