UNDP மற்றும் Search for Common Ground அமைப்புகளின் ஆதரவுடன் “பிரஜைகள் பட்டய” திரைநீக்க விழா சிறப்பாக நடைபெற்றது.

UNDP மற்றும் Search for Common Ground அமைப்புகளின் ஆதரவுடன், ஏறாவூர் சமூக மட்ட அமைப்புகளின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் “பிரஜைகள் பட்டய” திரைநீக்க விழா இன்று . காலை சிறப்பாக நடைபெற்றது.

இத்திட்டத்தின் ஊடாக, ஏறாவூர் நகரசபையினால் வழங்கப்படும் சேவைகள், அவற்றைப் பெற்றுக்கொள்வதற்குத் தேவையான ஆவணங்கள், அதேபோன்று பிரதேச செயலகத்தினால் வழங்கப்படும் சேவைகள் மற்றும் அவற்றுக்குத் தேவையான ஆவணங்கள் தொடர்பான தகவல்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக காட்சிப்படுத்தப்பட்டன. இதன் மூலம் அரச நிறுவனங்களின் சேவைகள் குறித்த விழிப்புணர்வை அதிகரித்து, பொதுமக்கள் இலகுவாகவும் வெளிப்படையாகவும் சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் ஏறாவூர் நகரசபையின் கௌரவ தவிசாளர்  எம்.எஸ். நழீம், பிரதேச செயலாளர் எஸ்.எச். முஸம்மில், உதவி பிரதேச செயலாளர் ஏ.எம். அஸ்லம், பிரஜா சக்தி தலைவர் ஹஸன் ஷா, கிளீன் ஸ்ரீலங்கா – ஏறாவூர் அமைப்பாளர் தோழர் ரகீஸ் சாஜித், UNDP மற்றும் Search for Common Ground நிறுவனங்களின் திட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ். ஜேரோமி, வளவாளர் எஸ். ரமேஸ்வரன், கிராம சேவை உத்தியோகத்தர் சாஹிர் ஹூஸைன், ஏறாவூர் நகர சமூக மட்ட அமைப்புக்களின் ஒன்றியத்தின் தலைவர் எம். றூமி, ஏறாவூர் நகர சமூகமட்ட அமைப்புக்களின் ஒன்றியத்தின் செயலாளர் எம்.ஐ.எம். ஆசாத், கட்டடக்கலைஞர் லுத்துப் றஹ்மான், சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளான எம். பாறூக், எம். முத்தலிப், எம். சித்தீக் (JP) உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top