தேசிய போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்வு.

தேசிய போதைப் பொருள் தடுப்பு மற்றும் மகிழ்ச்சியான குடும்பம் எனும் கருப்பொருளில் விழிப்புணர்வு நிகழ்வு  வியாழக்கிழமை (23/07)அன்று காலை மிச்நகர் கிராம சேவகர் பிரிவில் பரகா ஜும்ஆ பள்ளிவாயலில் மிச்நகர் கிராம உத்தியோகத்தர் MYA.அஸ்லம் தலைமையில் இடம்பெற்றது .

நிகழ்வின் பிரதம அதிதியாக ஏறாவூர் நகர் உதவி பிரதேச செயலாளர் ULM.அஸ்லம் கலந்து கொண்டிருந்தார்.

வளவாளர்களாக ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் சாபிறா வஸீம்,ஏறாவூர் ஆதார ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்தியர் MWF.யுஸ்றா,போதைப்பொருள் தடுப்பு உத்தியோகத்தர் ELM.இர்ஷாத்,மத்தியஸ்தசபையின் அபிவிருத்தி உத்தியோகத்தர் MAM.அஜூன் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டிருந்த பொதுமக்களுக்கு போதைப்பாவனையால் ஏற்படும் விளைவுகள் மற்றும் மீள சமூக வாழ்க்கைக்குள் புனர்வாழ்வு மூலம் இணையலாம் போன்ற பல விடயங்களை உள்ளடக்கிய தெளிவுரைகளை வழங்கி இருந்தனர்.

நிகழ்வில் ஏறாவூர் பற்று பிரதேசசபை உறுப்பினர்களான MH.சபூர்தீன்,SL.முனாப்தீன் பரகா ஜும்ஆ பள்ளிவாயல் உபதலைவர் TM.உமர் அறபாத் ,பிரதேச செயலகத்தின் சமுர்த்தி தலைமையக முகாமையாளர் k.கனேசமூர்த்தி, பாடசாலை அதிபர்களான HL.முஹாஜிர்,TLA.ஸக்கி உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,
உலமாக்கள்,சன்றைஸ் விளையாட்டு கழக நிருவாகிகள்,பள்ளிவாயல் நிருவாகிகள் என பலர் பங்கேற்று இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top