.

சமூகப் பணித் துறையில் ஏறாவூர் மண்ணில் முதலாவதாக ” முதுமாணி “பட்டத்தை பெற இருக்கின்ற காத்தான்குடி பிரதேச செயலகத்தில் தற்போது சமூக சேவை உத்தியோகத்தராக கடமையாற்றும் S.A.C.நஜிமுதீன் அவர்களை மனதார வாழ்த்தி கௌரவிக்கும் நிகழ்வு ஏறாவூர் மிச்நகர் ஜனாஷா நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் அதன் தலைவர் MH.சபூர்தீன் தலைமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு (23) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் ஏறாவூர் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவரும் மிச்நகர் ஜனாஷா நலன்புரி அமைப்பின் ஆலோசகருமான அல்ஹாஜ் MM.சாலி,திடீர் மரண விசாரணை அதிகாரியும் மிச்நகர் ஜனாஷா நலன்புரி அமைப்பின் ஆலோசகருமான ஹக்கீம் ,அமைப்பின் உபதலைவர் SL.முனாப்தீன்
,செயலாளர் உமர் அறபாத் ,நிருவாக உறுப்பினர்களான UL.இஸ்ஸதீன்,AS.லாபீர்,kM.ஹக்கீம்,சித்தீக் ,KM
.ஆசீக் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
சமூகசேவை உத்தியோகத்தர் கடந்த காலங்களில் ஏறாவூர் பிரதேசத்தில் ஆற்றிய பணிகள் நன்றியுணர்வுடன் நினைவு கூறப்பட்டதுடன் சமூகப்பணித் துறை கற்கை நெறியில் சித்தியடைந்தமைக்காக ஏறாவூர் ஜனாஷா நலன்புரி அமைப்பினால் பொன்னாடை போற்றி நினைவுச்சின்னமும் வழங்கி சமூகசேவை உத்தியோகத்தர் SAC.நஜிமுதீன் அவர்கள் கௌரவிக்கப்பட்டார்.
