ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவரின் 26 ஆவது ஆண்டு ஞாபகார்த்த தின நிகழ்வு..

  • ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் 26 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு புதன்கிழமை (16) பஜ்ர் தொழுகையை தொடர்ந்து புதிய காத்தான்குடி பெரிய ஜூம்ஆப் பள்ளிவாயலில் இடம்பெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவர் சட்ட முதுமாணி ரவூப் ஹகீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கட்சியின் தவிசாளர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிதிகளாக கலந்துகொண்டனர்.

மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் சமூக, அரசியல் மற்றும் மக்கள்சார் பங்களிப்புகளை நினைவுகூரும் இந்நிகழ்வில் குர்ஆன் ஓதுதல், துஆப் பிரார்த்தனை மற்றும் இரங்கல் உரைகள் ஆகியவை இடம்பெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவரின் 26 ஆவது ஆண்டு ஞாபகார்த்த தின நிகழ்வில் கட்சியின் உயர் பீட உறுப்பினர்கள், தொண்டர்கள்,ஆதரவாளர்கள், மத்ரஸா மாணவர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top