
ஊடகவியலாளர்களின் தொழில்சார் அறிவு, கல்வித்தகமை மற்றும் தொழிநூட்பத்திறன்களை மேம்படுத்தும் நோக்கில்
சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சினால் “அசிதிசி”புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் ஊடகவியலாளர் றிபாஸுக்கு புலமைப்பரிசில் வழங்கி வைக்கப்பட்டது.
கொழும்பு தபாலக தலைமைக்காரியாலய கேடபோர் கூடத்தில் நேற்று சனிக்கிழமை (14) நடைபெற்ற இந்நிகழ்வில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதியமைச்சர் கௌசல்யா ஆரியரத்தன உட்பட அமைச்சின் செயலாளர் கலாநிதி அனில் ஜயசிங்க, அமைச்சின் பிரதிச் செயலாளர்கள் உள்ளிட்ட அமைச்சின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
கடந்த 25 வருடங்களாக ஊடகத்துறையில் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் எம்.எப்.றிபாஸிற்கு, அவரது நீண்டகால ஊடகச் சேவையின் மத்தியில் கிடைத்துள்ள இந்தப் புலமைப்பரிசில் அங்கீகாரம் மிகுந்த மகிழ்ச்சியையும் புதிய உற்சாகத்தையும் அளித்துள்ளது.
தனது 25 வருடகால ஊடகப் பயணத்தில் சமூகத்தின் பல்வேறு பிரச்சினைகள், மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள், பிரதேசத்தின் அபிவிருத்தி மற்றும் சமூக நலன் சார்ந்த விடயங்களை ஊடகங்களின் ஊடாக வெளிக்கொண்டு வருவதில் அவர் தொடர்ச்சியாகப் பங்களித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
