யோஷித ராஜபக்சவிற்கு ஜனவரி 27 ஆம் திகதிவரை விளக்குமறியல்

நேற்று காலை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட யோஷித ராஜபக்ச, மாலை கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், ஜனவரி 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ரத்மலானை, சிறிமல் பிரதேசத்தில் அமைந்துள்ள 34 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வீடு மற்றும் காணியை வாங்கியது தொடர்பாக யோஷித ராஜபக்க்ஷவை சந்தேகநபராகப் பெயரிட போதுமான ஆதாரங்கள் இருப்பதாக சட்டமா அதிபரால் கடந்த 23ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவித்ததைத் தொடர்ந்து இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top