மட்டு மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை குறித்து கலந்துரையாடல் .
மட்டக்களப்பு மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைக்கு தீர்வுகான விசேட கலந்துரையாடல்!! மட்டக்களப்பு மாவட்ட ஆள் கடல் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடலொன்று நேற்று மட்டக்களப்பில் இடம் பெற்றது. மட்டக்களப்பு மாவட்டகடற்றொழில் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் றுக்சான் குருஸ் அவர்களது ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தின் மாவட்ட அலுவலகத்தில் இடம் பெற்ற கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமாகிய திருமதி.ஜஸ்டினா முரளிதரன், கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்…
