ஏறாவூர் அல் மத்ரஸதுல் முஹம்மதியாவின் பரிசளிப்பு விழா.

ஏறாவூரில் ஆன்மீக கல்வியின் ஊடாக பல நூற்றுக்கணக்கான ஹாபிழ்களை உருவாக்கிய அல் – மத்ரஸதுல் முஹம்மதியா அரபுக்கல்லூரியின் 2026ம் ஆண்டுக்கான பரிசளிப்பு விழா கல்லூரியின் அதிபர் மௌலவி கே.எம்.எம்.கபீர் (இஹ்ஸானி)தலைமையில் (03/10) சனிக்கிழமை அன்று ஷாபிஹ் பள்ளிவாயல் வளாகத்தில் இடம்பெற்றது .

நிகழ்வின் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் சுபைர் கலந்து சிறப்பித்ததுடன் கௌரவ அதிதிகளாக ஏறாவூர் நகரசபையின் முன்னாள் தவிசாளரும் சிரேஷ்ட ஆசிரயருமான ஐ.எம்.வாசித் அலி,காத்தான்குடி ஆலிம்களுக்கான ஆலோசனை மற்றும் வழிகாட்டலுக்கான அமைப்பின் தலைவர் மௌலவி எச்.எம். சாஜஹான் (பலாஹி),ஏறாவூர் நகரசபை உறுப்பினர் எஸ்.எம்.அறூஸ் ,விகாராதிபதிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர் .

பல நூற்றுக்கணக்கான பெற்றோர்கள் கலந்து சிறப்பித்த இம்மாபெரும் பரிசளிப்பு விழாவில் மாணவ மாணவிகள் கௌரவிக்கப்பட்டு பரிசில்கள் மற்றும் சான்றிதல்கள் வழங்கி வைக்கப்பட்டன.

அரபுக்கல்லூரி மாணவர்களின் உயர்வுக்கு உறுதுணையாக இருந்த பெற்றோர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நிகழ்வுக்கு வருகை தந்தோரினது பாராட்டினை பெற்று இருந்தது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top