ஒரு நாட்டின் முன்னோக்கிய பயணம் கல்வியிலேயே தீர்மானிக்கப்படுகின்றது.

புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பான தேசிய உரையாடலை உருவாக்குவதிலும், அதனை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதிலும் நாட்டின் ஊடகங்கள் முன்னோடிப் பங்குதாரர்களாகத் திகழ்கின்றன என, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் பற்றிய உண்மையான, துல்லியமான தகவல்களை மக்களுக்குத் தொடர்பாடல் செய்வதற்காகத் தயாரிக்கப்பட்ட ‘RIES’ (Reform Information & Enquiry Service) உத்தியோகபூர்வ இணையத்தளத்தை அறிமுகப்படுத்துவதற்கும், கல்விச் சீர்திருத்தச் செயற்றிட்டம் குறித்து இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுக்குத் தெளிவுபடுத்துவதற்கும் ஒக்டோபர் 14ஆம் திகதி அலரி மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

புதிய கல்விச் சீர்திருத்தச் செயற்றிட்டம் தொடர்பில் சரியான தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக விசேடமாக உருவாக்கப்பட்ட ‘RIES’ இணையத்தளத்தை உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக்கும் நிகழ்வு, பிரதமரின் பங்கேற்புடன் இடம்பெற்றது.

கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பான பொதுமக்களின் கேள்விகளையும் சந்தேகங்களையும் சமர்ப்பிப்பதற்கு https://edureformfact.moe.gov.lk என்ற இணையத்தளத்திற்குப் பிரவேசிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top