சிறுவர் தினத்தை முன்னிட்டு இமாம் கஸ்ஸாலி ஃபவுண்டேஷன் முன்பள்ளிப் பாடசாலையினால் ஏற்பாடு செய்யப்பட்ட “சிறுவர் சந்தை 2026” நிகழ்வு இன்று ஏறாவூர் சிறுவர் பூங்காவில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இமாம் கஸ்ஸாலி ஃபவுண்டேஷனின் ஸ்தாபகத் தலைவரும், முன்னாள் ஏறாவூர் நகரசபை உறுப்பினருமான AR Firows அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதிகளாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான கௌரவ ஹபீப் றிபான் அவர்களும் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஏறாவூர் நகரசபைத் தலைவருமான கௌரவ எம்.எஸ். நளீம் அவர்களும் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.

மேலும், அவர்கள் சிறப்பு அதிதிகளாக ஏறாவூர் நகரசபையின் கௌரவ உறுப்பினர்களான உவைஸ் அல்-ஹாபில் மற்றும் அஜ்வத், மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்தின் முன்பள்ளிக் கல்வி உதவிப் பணிப்பாளர் ஏ.எல் பாறூக் அவர்கள், முன்பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள், பிரதேச முக்கியஸ்தர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹபீப் றிபான் அவர்கள் உரையாற்றுகையில் இந்த சிறுவர்கள் சந்தையானது, பிஞ்சு உள்ளங்களுக்கு மகிழ்ச்சியான சூழலில் நடைமுறை அனுபவங்களைப் பெற்றுக்கொள்வதுடன், அவர்களின் தொடர்பாடல் திறன், சமூகப் பழக்கவழக்கங்கள், தன்னம்பிக்கை மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றை வளர்க்கும் ஒரு சிறந்த தளமாக அமைந்திருந்தது.

மேலும் இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள்! இவர்களின் புன்னகையில் தான் நாளைய உலகின் ஒளி இருக்கிறது. அனைத்து சிறுவர்களுக்கும் சர்வதேச சிறுவர் தின வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

மேலும் இவ்வாறான ஆக்கபூர்வமான நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்த இமாம் கஸ்ஸாலி ஃபவுண்டேஷன் நிர்வாகத்திற்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் தனது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top