பாடசாலைகளின் மூன்றாம் பாடசாலைப் பருவத்தின் முதலாம் கட்டம் நிறைவடைதல் மற்றும் இரண்டாம் கட்டம் ஆரம்பமாதல்.

2026-ஆம் ஆண்டிற்கான அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் பாடசாலைப் பருவத்தின் முதலாம் கட்டம் நிறைவடைதல் மற்றும் இரண்டாம் கட்டம் ஆரம்பமாதல்.

2026 ஆம் ஆண்டில் அரச பாடசாலைகள் மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதல் கட்டம். சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு 2026.08.07 வெள்ளிக்கிழமை அன்றும், முஸ்லிம் பாடசாலைகளுக்கு 2026.09.02 புதன்கிழமை அன்றும் முடிவடையும் என்று கல்வி அமைச்சு அறிக்கை வௌியிட்டுள்ளது.

அத்துடன், அனைத்துப் பாடசாலைகளுக்குமான மூன்றாம் பாடசாலைத் தவணையின் இரண்டாம் கட்டம் 2026.09.07 திங்கட்கிழமை ஆரம்பமாகி 2026.12.04 வெள்ளிக்கிழமை முடிவடையும்.

இதேவேளை, 2026 க.பொ.த. (உயர்தர) பரீட்சை ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 05 ஆம் திகதி வரை நடைபெறும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top