புதிய காத்தான்குடி மஸ்ஜிதுல் அன்வர் பள்ளிவாயலின் புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா.
புதிய காத்தான்குடி கடற்கரையோர வீதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற மஸ்ஜிதுல் அன்வர் பள்ளிவாயலின் புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு வைபவம் ஞாயிற்றுக்கிழமை (31) காலை 07.00 மணியளவில் பக்திப்பூர்வமாக இடம்பெற்றது. மேற்படி பள்ளிவாயலின் நம்பிக்கையாளா் சபை சபை தலைவர் ஏ.பீ.எம்.றஜாயி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்ச்சியில் புதிய கட்டடத்திற்கான அடிக்கல்லை உலமாக்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் இணைந்து நாட்டி வைத்தனர். காத்தான்குடி மஃஹதுஸ்ஸுன்னா அந்நபவிய்யா மகளிா் அரபுக் கல்லூரியின் தலைவா் அஷ்ஷெய்க் எம்.சீ.எம்.றிஸ்வான் (மதனி) அவா்களினால் சிறப்பரை…
