கல்குடா யங் ஸ்டாரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இரத்ததான முகாம்.

கல்குடா யங் ஸ்டார் விளையாட்டுக்கழகம் மீராவோடை ஜும்ஆப்பள்ளிவாயல் மற்றும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையுடன் இணைந்து நடாத்திய இரத்த தான முகாம்  12.05.2026ம் திகதி திங்கட்கிழமை அன்று காலை 8 மணி முதல் 5 மணி வரை மீராவோடை ஜும் ஆப்பள்ளிவாயலில் இடம்பெற்றது. வைத்தியசாலைகளில் நிலவும் குருதித்தட்டுப்பாட்டை நிவர்த்திக்கும் வகையில் கல்குடா யங் ஸ்டார் விளையாட்டுக்கழகத்தின் தலைவரும் கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினருமான ஐ.எம்.றிஸ்வின் அவர்களின் வழிகாட்டலில் பிரதித்தலைவர் ஏ.எல்.சதாம் தலைமையில் பள்ளிவாயல் நிருவாகிகளின் பங்குபற்றுதலுடன்…

Read More

தேசியத்தில் சாதனை படைத்த மட்டு.ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மாணவி.

அகில இலங்கை அஹதியா சம்மேளனம் நாடளாவிய ரீதியில் நடத்திய “அஹதியா இடைநிலை தேசிய சான்றிதழ் பரீட்சை 2025/2026” இல் ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மாணவி எஸ்.பாத்திமா ஹப்னா முதல் 10 இடங்களுக்குள் தெரிவு செய்யப்பட்டு வரலாற்றுச்சாதனை படைத்து, பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார். வியத்தகு இச்சாதனையை நிலைநாட்டிய இம்மாணவிக்கு ஓட்டமாவடி அஹதியா பாடசாலை நிர்வாகம் மற்றும் அதிபர் எம்.எம்.பைஷல் ஆகியோர் மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றனர். மார்க்கக்கல்வியில் இம்மாணவி காட்டிய அதீத ஆர்வமும், கடின உழைப்பும் இன்று…

Read More

சம்மாந்துறை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் இன்று நிறைவேற்றம்.

. சம்மாந்துறை பிரதேச செயலக அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (12) ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஏ. ஆதம்பாவா தலைமையில் பிரதேச செயலக கேட்போர் மண்டபத்தில் நடைபெற்றது. சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபா அவர்களின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.எம் தாஹீர், எம்.எஸ் உதுமாலெப்பை, கே.கோடிஸ்வரன், எம்.எஸ் வாஸீத் மற்றும் சம்மாந்துறை பிரதேச சபைத் தவிசாளர் ஐ.எல்.எம் மாஹீர், மாவட்ட பிரதம கணக்காளர் ஏ.எல் மஹ்ரூப், மாவட்ட…

Read More

ஒரு பிரதேச செயலகப்பிரிவுக்கு ஓர் இளம் ஊடகவியலாளர் நியமனம்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் பிரதேச ஊடகவியலாளர் வலையமைப்பொன்றைக் கட்டியெழுப்புவதற்காக பிரதேச செயலகப் பிரிவிற்கும் ஒரு இளைஞர் அல்லது யுவதி வீதம் தெரிவு செய்யும் வேலைத்திட்டம்  தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தெரிவு செய்யப்பட்ட இளைஞர் யுதிகளுக்காக வழங்கப்படும் பயிற்சி,உள்ளடக்கப்படும் விடயங்கள் மற்றும் பயிற்சியின் போது அவர்களுக்கு வழங்க கிடைக்கும் சந்தர்ப்பங்கள் குறித்த கலந்துரையாடல் நேற்று (11) இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சில் இடம்பெற்றது. இப் பயிற்சி ஒரு துறையை மாத்திரம் வரையறுக்காது செய்திப் பத்திரிகை, தொலைக்காட்சி…

Read More

டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட மூதூர் பிரதேச செயலக  மக்களுக்கு காசோலை வழங்கி வைப்பு.

டித்வா புயலினால் சேதமாக்கப்பட்ட வீடுகளின் புனரமைப்பு பணிகளுக்கான காசோலை வழங்கும் நிகழ்வு மூதூர் பிரதேச செயலாளர் பிர்னாஸ் இஸ்மாயில் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று செவ்வாய்க்கிழமை(12) காலை இடம்பெற்றது. இதன்போது மூதூர் பிரதேச செயலகப் பிரிவிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 19 பயனாளிகளுக்கான நஷ்டஈட்டுக்கா காசோலையினை பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர பிரதம  அதிதியாக கலந்து கொண்டு வழங்கி வைத்தார். இதன்போது வீடுகளின் பாதிப்புகளுக்கு ஏற்ற வகையில் ஒவ்வொருவருக்கான பணம் காசோலையாக வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் தேசிய மக்கள்…

Read More

மட்டக்களப்பு மாவட்டத்தில் சீரற்ற காலநிலை நிலவுகிறது .

மட்டக்களப்பு ஏறாவூரில் இன்று திங்கள்கிழமை நிலவிய சீரற்ற காலநிலை தொடர்ந்த வண்ணம் உள்ளது. காற்றுடன் கூடிய மழை பெய்தமையால் தாழ்நிலப் பிரதேசங்களில் வெள்ளம் தேங்கி நிற்பதை காண முடிகின்றது. இன்று பிற்பகல் வேளை வீசிய வேகமான காற்றுடன் அதிக மழையும் பெய்திருந்தது.மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன்பு நிலவிய அதிக வெப்பநிலையினால் விவசாயிகள் பல சவால்களை எதிர்நோக்கியதாகவும் இன்று பெய்த மழையினால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

Read More

ஜனாதிபதியின் நிந்தவூர் வருகை தொடர்பில் நிந்தவூர் பிரதேச சபையில் இன்று  விசேட சபைக் கூட்டம்.

நிந்தவூர் பிரதேச சபையின் 05ஆவது சபையின் 02ஆவது விசேட கூட்டம் இன்று (11) நிந்தவூர் பிரதேச சபை மண்டபத்தில், தவிசாளர் சட்டத்தரணி றியாஸ் ஆதம் தலைமையில் நடைபெற்றது. நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி அனுர குமார திஸ்ஸநாயக்க அவர்களின் நிந்தவூர் வருகையை முன்னிட்டு, அதற்கான ஏற்பாடுகள் மற்றும் தொடர்புடைய செயற்பாடுகள் குறித்து இவ்விசேட சபைக் கூட்டத்தில் விரிவாக கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக, 2026ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தின் கீழ் அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் சிபாரிசில் நிந்தவூர் கலாச்சார மண்டபத்திற்கான நிதி…

Read More

தேசியத்தில் முதன்மை பெற்று சாதனை படைத்த வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை.

தேசியத்தில் அனைத்துப்பிரிவுகளிலும் முதன்மை பெற்று சாதனை படைத்த வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை தேசிய ரீதியில் தேர்தல் ஆணைக்குழுவினால் வாக்கின் பலம் எனும் தலைப்பில் நடாத்தப்பட்ட குறுந்திரைப்பட போட்டியில் வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை அனைத்துப்பிரிவுகளிலும் தேசிய ரீதியில் முதன்மை நிலை பெற்று சாதனை படைத்துள்ளது. குறும்படத்தை சமர்ப்பித்த என்.ஆர்.முஸ்ஹப் அஹமட், படப்பிடிப்புக்கு உதவிய எம்.என்.எம்.ஸஹ்ரான், எம்.எச்.எம்.நிஸ்பான் ஆகிய மாணவர்களுக்கும் குறும்படத்தில் நடித்த பிரதி அதிபர் எம்.ஏ.அபுதாஹிர் அவர்களுக்கும் தயாரிப்பு, வசனம், நெறியாள்கை அனைத்தையும் மேற்கொண்டு வெற்றி…

Read More

18 வயதை எட்டியவுடன் முதலாவது இரத்ததானம் வழங்கிய சம்மாந்துறை மாணவி .

இன்றைய இளைய சமுதாயத்திற்கு முன்மாதிரியாக, சம்மாந்துறை அல்-மர்ஜான் பாடசாலையைச் சேர்ந்த மாணவி ஒருவர் தனது 18 ஆவது வயதைப் பூர்த்தி செய்தவுடன் முதலாவது இரத்ததானத்தை வழங்கி பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளார். சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் அவசர இரத்தத் தேவையை நிவர்த்தி செய்யும் நோக்கில், அம்பாறை மாவட்ட உயிர் பாதுகாப்பு மற்றும் அவசரகால மீட்பு குழுவின் ஏற்பாட்டில் இன்று சம்மாந்துறையில் மாபெரும் மனிதாபிமான இரத்ததான முகாம் நடைபெற்றது. இம்முகாமில், அல்-மர்ஜான் பாடசாலையில் உயிரியல் பிரிவில் கல்வி கற்று வரும்…

Read More

35வது பிரதேச இளைஞர் விளையாட்டு போட்டியில் வெற்றிபெற்றவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் கடந்த ஆண்டு நடைமுறைப்படுத்திய 35 ஆவது பிரதேச இளைஞர் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற இளைஞர் யுவதிகளுக்கான சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கும் நிகழ்வு செவ்வாய்கிழமை( 5)அன்றுஏறாவூர் நகர் பிரதேச இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் AW. இர்சாத் அலி தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. நிகழ்வின் அதிதிகளாக ஏறாவூர் நகர் பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில், உதவிப் பிரதேச செயலாளர் யூ.எம்.அஸ்லம், பிரதேச செயலக கணக்காளர் திருமதி. தர்மினி, தேசிய…

Read More
Back To Top